மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் நிலை கேரளாவை விட மோசமாகி இருக்கும்.. கட்சி தலைமையை எச்சரிக்கும் சவுமித்ரா கான்

 
பா.ஜ.க.

மேற்கு வங்க பா.ஜ.க. விவகாரங்களில் தலையீடு செய்யாவிட்டால், மாநிலத்தில் பா.ஜ.க.வின் நிலை கேரளாவை விட மோசமாக இருக்கும் என கட்சி தலைமைக்கு அம்மாநில பா.ஜ.க. துணை தலைவர் சௌமித்ரா கான் எச்சரிக்கை செய்துள்ளார்.

மேற்கு வங்க பா.ஜ.க.வில் உட்கட்சி பூசல் வெடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்க பா.ஜ.க.வின் துணை தலைவர் சௌமித்ரா கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் சரியான நேரத்தில் மேற்கு வங்க பா.ஜ.க. விவகாரங்களில் தலையீடு செய்யாவிட்டால், மாநிலத்தில் பா.ஜ.க.வின் நிலை கேரளாவை விட மோசமாக இருக்கும். நாங்கள் திசையற்றவர்களாகி விட்டதால் , எங்களுக்கு திசைகள் தேவை. 

சௌமித்ரா கான்

டெல்லி (பா.ஜ.க. கட்சி தலைமை) மட்டுமே செய்யக் கூடிய விஷயங்கள் உள்ளன. டெல்லியில் இருந்து சரியான  நேரத்தில் உதவி கிடைத்தால், திரிணாமுல் காங்கிரஸால் எதுவும் செய்ய முடியாது. நாம்  ஒரு தீர்வு கண்டால், திரிணாமுல் காங்கிரஸால் நம்மை சோர்வடைய செய்ய முடியாது. மேற்கு வங்க பா.ஜ.க.வில் உள்ள ஒரே நல்ல தலைவர் சுவேந்து ஆதிகாரிதான்.  

சுவேந்து ஆதிகாரி

மேற்கு வங்க பா.ஜ.க.வில் உள்ள அனுபவமுள்ள தலைவர்கள், உயர்மட்டத தலைமையிடம் நேர்மையாக பேச வேண்டும். சுயபரிசோதனை தேவை. குறைபாடுகளை மறைப்பது பயனளிக்காது மற்றும் கட்சிக்கும் நல்லதல்ல. மூத்த தலைவர்கள் முன் வெளிப்படையாக பேச வேண்டும், அப்போதுதான் அவர்களால் ஆலோசனைகளை வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.