மத்திய அரசுக்கு எதிராக நான் பேசாமல் இருந்திருந்தால் துணை குடியரசு தலைவராக ஆகியிருப்பேன்.. சத்ய பால் மாலிக்

 
சத்ய பால் மாலிக்

மத்திய அரசுக்கு எதிராக நான் பேசாமல் இருந்திருந்தால் துணை குடியரசு தலைவராக ஆகியிருப்பேன் என்று மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.

மேகாலயா கவர்னராக சத்ய பால் மாலிக் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நீங்கள் மத்திய அரசுக்கு எதிராக பேசாவிட்டால் நீங்கள் துணை குடியரசு தலைவராக ஆக்கப்படுவீர்கள் என்று சிலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் நான் அதை (மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்தவில்லை) செய்யவில்லை. நான் என்ன உணர்கிறேன் என்பதை நான்  பேசுகிறேன்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

குடியரசு துணை தலைவர் பதவிக்கு ஜகதீப் தங்கர் தகுதியானவர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் என்ன செய்தியை வழங்குகிறது என்பது எனக்கு தெரியாது. இது மக்களுக்கு சொல்ல வேண்டும். ஆனால் ராகுல் காந்தி சரியான வேலையை செய்கிறார் என்று நான் உணர்கிறேன். ராகுல் காந்தி தனது கட்சிக்காக உழைக்கிறார், அது நல்லது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக கல்வி கட்டுப்படுத்தப்படுகிறது… மம்தா அரசு மீது கவர்னர் ஜகதீப் குற்றச்சாட்டு

கடந்த ஆகஸ்ட் 11ம் தேதியன்று நாட்டின் 14வது  துணை குடியரசு தலைவராக ஜகதீப் தங்கர் பதவியேற்றார். சத்ய பால் மாலிக் அடிப்படையில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்.  கவர்னர் பதவிக்காக கட்சியிலிருந்து விலகினார். அப்படிப்பட்டவர் ராகுல் காந்தியை பாராட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.