சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அதிமுகவை கைப்பற்றுவார்- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

பக்தியில் உள்ளவர்களே சனாதனம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில்  இதைப்பற்றி ஆளுநர் பேசியிருக்க கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Exclusive | Sasikala will reclaim AIADMK: TTV Dhinakaran - India News


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவில் திருமாளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பக்தியில் உள்ளவர்களே சனாதனம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் விஷயமா இருக்கும் போது அரசியல்வாதிகளே இதைப்பற்றி பேசுவதை தவிர்க்க கூடிய நிலையில் இதைப்பற்றி ஆளுநர் பேசியிருக்க கூடாது.சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அதிமுகவை கைப்பற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவுக்கு இடம் இல்லை என எடப்பாடி கூறியதற்கு காலம்தான் பதில் சொல்லும். நான் ஒரு ஜோதிடரும் அல்ல அரசியல் வல்லுநரும் அல்ல, சாதாரண அரசியல்வாதி.

கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்தில் திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ள விவகாரத்தில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு  உரிய முறையில் அணுகி நீதிமன்றம் மூலம்  தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவாக இருப்பார்கள்” என தெரிவித்தார்.