புரட்சிப்பயணத்தை தொடங்கிய சசிகலா

 
sasikala

தமிழக மக்களின் நலனுக்காகவும் , திமுக தலைமையிலான ஆட்சியால் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்திடவும் , பெண்ணினத்தின் உரிமைகளை நிலைநாட்டிடவும் , சசிகலா , சேலம் , ஈரோடு மாவட்டங்களில் தனது புரட்சிப்பயணத்தை தொடர்ந்து மேற்கோள்கிறார் 

Will She, Won't She: Sasikala Says Coming Soon to Set Party on 'Right  Track'. Is AIADMK Ready for Challenge?

இதுதொடர்பாக அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரின் பெருமைகளையும் , பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய ஜெயலலிதா ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார் . இதற்காக , வருகின்ற 07-09-2022 புதன்கிழமை அன்று காலை , தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றடைகிறார் . அதன்பின் மறுநாள் 08-09 2022 வியாழக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டி , பாமணி என்ற இடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் காலை நடைபெற இருக்கின்ற மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார் . 

அதன்பின்னர் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு திருவையாறு , திருமானூர் , கீழப்பலூர் , அரியலூர் , பெரம்பலூர் , வீரகனூர் வழியாக தலைவாசல் சென்றடைந்து மதியம் 2.30 மணியளவில் , அங்கிருந்து தனது புரட்சிப்பயணத்தை மேற்கொள்ளும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் ஆத்தூர் பேருந்து நிலையம் , புத்திரகவுண்டன் பாளையம் , வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் , சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா , தாதகாபட்டி , சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு , சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும் , பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார் . 

அதன்பிறகு மறுநாள் 12-09-2022 திங்கள்கிழமை அன்று மதியம் 3.00 மணியளவில் அரியானூரிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை மேற்கொள்ளும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மகுடஞ்சாவடி , சங்ககிரி எடப்பாடி பிரிவு , பள்ளிப்பாளையம் , ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா , ஈரோடு திண்டல் முருகன் கோவில் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும் , பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார் . புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள் , கழக முன்னோடிகள் , கழக தொண்டர்கள் , புரட்சித்தலைவி அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள் , இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.