ஒற்றைத் தலைமை வேண்டும்,எனது தலைமையில் அதிமுக மீண்டும் எழுச்சி பெரும்- சசிகலா
சசிகலா தனது மூன்றாவது கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய சசிகலா, “ஒருவர் சுய லாபத்திற்காக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தை முடக்குவாதை ஏற்றுக்கொள்ள முடியாது. வரும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஐ நீக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் ஒருத்தரும் ஒருவரை நீக்க முடியாது. அரசியலில் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு சோதனைகள் பல வரும், அனைத்தையும் எதிர்கொண்டு முறியடிக்க முடியும்,சொத்துகளை முடக்கினாலும் எதிர்கொண்டு மீண்டும் வருவேன்.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை திமுக அரசு ஏற்க வேண்டும். விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன். பொதுக்குழு கூட்டம் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். ஒற்றைத் தலைமை வேண்டும்,எனது தலைமையில் அதிமுக மீண்டும் எழுச்சி பெரும்” எனக் கூறினார்.