நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா என்ன செய்தார்களோ அதுபோன்று செய்வேன் - சசிகலா

 
சசிகலா

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அதிகாலையிலேயே  விகே சசிகலா கையில் வேலினை கொண்டு சென்று முருகனை வழிபட்டுச் சென்றார். 

விரைவில் நிலை மாறும், தலை நிமிரும்': சசிகலா அறிக்கை- Dinamani

இதனை தொடர்ந்து தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “திமுகவினர்  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா என்ன செய்தார்களோ அது போன்று செய்வேன். அதிமுக தொண்டர்கள் தான் தலைவர்களை உருவாக்குகிறார்கள். தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு என்பது இல்லை.

 திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை மக்களுக்கு நிறைவேற்றவில்லை, குறிப்பாக, மின்சாரம் அடிக்கடி இல்லாமல் போகிறது. மின்சாரம் இல்லாதது தான் தற்போதைய கோரிக்கையாகவே விவசாய மக்களிடம் இருந்து வருகிறது. மேலும், முதியோர் உதவி தொகை என்பது  கொடுக்க படாமலும், இருந்து வருகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ அது போன்று என்னுடைய  ஆட்சி இருக்கும்” எனக் கூறினார்