அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான்- சசிகலா

 
sasikala

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓ. பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா அணியினர் என தங்களுடைய ஆதரவாளர்களுடன் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்தினர். 

Image

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் . அதிமுக தலைமை யார் என்பது தொண்டர்களுக்கு தெரியும். அதிமுக தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலில் வெற்றிப் பெறுவதே இலக்கு. மேலும், தேர்தலில் பொது எதிரியான திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் உட்பட அனைவரையும் ஒன்றிணைப்பேன், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது. அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் எல்லாமே நடக்கும்” என தெரிவித்தார். 

முன்னதாக சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எந்த நிலையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, கழக மெகா கூட்டணியில் சசிகலா, தினகரன், பன்னீர் செல்வத்தை இணைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில்,. சசிகலா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.