சபரீசனை கைது செய்யக்கோரி சசிகலா புஷ்பா சாலைமறியல்

 
sப்

முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசனை கைது செய்யக்கோரி பாஜக மாநில துணைத்தலைவரும்,  முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

 முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் கடந்த ஒன்னாம் தேதி அன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினார். அவர் யாகம் நடத்தும் வரைக்கும் பக்தர்கள் யாரும் பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.  இதற்கு எதிராக பக்தர்களும் பாஜகவினரும் கொதித்தெழுந்தனர்.  மேலும்,  இந்து ஆகம விதிக்கு புறம்பாக அவர் யாகம் நடத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 

சப்

 முதல்வர் மருமகன் யாகம் நடத்துவதற்காக பக்தர்கள்  அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   இந்து ஆகம விதிக்கு புறம்பாக யாகம் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  

ஆகவே,  சபரீசனை கைது செய்யக்கோரி திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தின் முன்பாக 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆனால் போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் அனுமதி மறுத்தனர்.   எதிர்ப்பை மீறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.  இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 அப்போது முன்னாள் எம்.பியும் தமிழக பாஜக துணை தலைவருமான சசிகலா புஷ்பா வந்து போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தினார்.  சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆகம விதிக்கு எதிராக யாகம் நடத்த போது  இந்த போலீசார் எல்லாம் எங்கே சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   சபரீசனை கைது செய்யக்கோரி சசிகலா  புஷ்பா உள்ளிட்ட பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர்.   பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.