சாராய அமைச்சர்.. சாராய ஆளுநர்.. சாராயம் கொண்டான்: வலுக்கும் மோதல்

 
ட்ம்க்

’’என்ன இது, என்ன.. மரத்து மேலே குரங்கு தாவுகிற மாதிரி எல்லோரும் சுத்தி, சுத்தி வர்றீங்க..என்ன இது? நான் உங்களுக்கு என்ன சொன்னேன்? ஒரு நிமிஷம்..சாப்பிடப் போகும்போது நான் உங்களுக்கு என்ன சொன்னேன்.  சாப்பிட போகும்போது என்ன சொல்லிவிட்டு போனேன்.  மரியாதை நின்னு, நீங்கள் எல்லாம் சாப்பிட போங்கன்னு சொல்லிட்டு ப் போனேனா, ஊர்ல நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதெல்லாம் நீங்க கேட்பீங்க.  அதற்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க..’’

w

-கடலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது,  செய்தியாளர்கள் அண்ணாமலை இடம் பேட்டி எடுக்க முயற்சித்த போது தான்,  மேற்கண்டவாறு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசி ஆவேசப்பட்டார்.  இது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

’’சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி என்றார் அண்ணாமலை.   50 மது வகைகளை புதிதாக தீபாவளிக்கு அறிமுகம் செய்த புதுச்சேரி அரசை நிர்வகிக்கும் ஆளுநர் தமிழிசையை இனி சாராய ஆளுநர் என்று அழைக்கலாமா ? என்று கேட்டிருக்கிறார் டாக்டர்  சுந்தரவள்ளி என்பவர்.  


சுந்தரவல்லியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆதரவை விட  எதிர்ப்பு வலுத்து வருகிறது.  1971 ல் மது விலக்கை நீக்கி தமிழர்களுக்கு  மதுவை ஊற்றி கொடுத்த கலைஞர் கருணாநிதியை மதுபோதையின் தந்தை,சாராயம் கொண்டான் என அழைக்கலமா? என்று கேட்கிறார்கள்.  

அஞ்சு கட்சி அமாவாசை , அணில் பாலாஜி , சாராய வியாபாரி செந்தில் பாலாஜி பெரியார் பேத்தி சுந்தர வள்ளி இணுமுமா நீ சாவல என்கிறார்கள்.   மதுக்கடைகளை மூடுவோம் என பாண்டிச்சேரியில் யாரும் சொன்னதில்லையே? இங்கு "இளம்விதவைகள்" என்று ஒருவர் கண்ணீர்விட்டாரே? அவரை முதலில் ஒரு வார்த்தைக் கேட்க துப்பிருக்கிறதா?அங்கு ஆட்சிக்கு வந்தவுடன், மதுக்கடைகளை மூடுவோம் என்றோ அல்லது கட்சியினர் நடத்தும் மதுபானத் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று தற்போதிருக்கும் ஆளும் கட்சியினர் சொல்லவில்லையே என்கிறார்கள்.

t

மேலும்,   ஃப்ரெஞ்ச் ஆதிக்க காலத்திலிருந்து, அங்கு மதுக்கடைகள் நடந்து கொண்டுதானே வருகின்றன.  வரலாறு தெரியாதவளெல்லாம்...., ஏன், பாண்டிச்சேரில் முதல்வர் இல்லயா??? பாண்டிச்சேரியை, ஆளுநர் தமிழிசை நிர்வகிக்கிறார் என்றால்.. தமிழகத்தை ஏன், ஆளுநர் ஆர்.என்.ரவி நிர்வகிக்க கூடாது??புதுச்சேரி கவர்நருக்கு எல்லா அதிகாரமும் இருக்கு ஆனால் தமிழக கவர்நருக்கு எந்த அதிகாரமும் இல்லை  இதுதானே உன் உருட்டு என்று கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.