இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது... சஞ்சய் ரவுத்

 
அதிகாரப்பூர்வமாக வெளியேறிய சிவ சேனா…. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காது- சஞ்சய் ரவுத் தகவல்

இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.

சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஒலி பெருக்கி பிரச்சினை முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். சட்டப்படி வேலை செய்யப்படும். மகாராஷ்டிராவில் அமைதி நிலவுகிறது. சிலர் மாநிலத்தில் நிலைமையை கெடுக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மத வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் ஒரே கொள்கை இருக்க வேண்டும். இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோயில்களில் ஆரத்திக்கு ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்தியதால் இந்து சமூக மக்களும் மகிழ்ச்சியடையவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என அண்மையில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதியன்று மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் சில மசூதிகளுக்கு வெளியே ஒலி பெருக்கிகள் வைத்து ஹனுமன் கீர்த்தனைகளை இசைக்க முயற்சி செய்ததாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.