ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கம் சட்டவிரோதமானது.. சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் சட்டவிரோதமானது என சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு எந்த வேலையும் செய்யவில்லை என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார்.

ஏக்நாத் ஷிண்டே

இது தொடர்பாக சஞ்சய் ரவுத் கூறுகையில்,  மகாராஷ்டிராவில் புதிய அரசு (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு) அமைந்து 12 நாட்கள் கடந்து விட்டன, மகாராஷ்டிரா அரசு எந்த வேலையும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் சட்டவிரோதமானது. மகாராஷ்டிரா மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 நாட்கள் கவர்னர் எங்கே இருக்கிறார்? என தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை (லிட்டருக்கு) ரூ.5ம், டீசல் விலை (லிட்டருக்கு) ரூ.3ம் குறைப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், சாமானிய குடிமக்களுக்கான நன்மைகளுக்காக பிரதமரின் வேண்டுகோளை நோக்கி இது எங்கள் படியாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு முடிவால் மாநில அரசு ரூ.6 ஆயிரம் கோடி சுமையை ஏற்கும் என தெரிவித்தார்.