அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. தலைவர்கள் எப்படி வசூல் செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவேன்... சஞ்சய் ரவுத்

 
சஞ்சய் ரவுத்

அமலாக்கத்துறை வாயிலாக பா.ஜ.க. தலைவர்கள் எப்படி வசூல் செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவேன் என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரவித்தார்.

சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்,  தன்னையும், தனக்கு நெருக்கமானவர்களையும் அமலாக்கத்துறை துன்புறுத்துவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நாங்கள் உங்கள் (பா.ஜ.க. தலைவர்கள்) வீட்டுக்குள் நுழைய தொடங்கினால், நீங்கள் நாக்பூரை அடைய முடியாது. அடுத்த முறை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே இருந்து பேச போகிறேன்.

வெங்கையா நாயுடு

அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் ஏஜெண்டாக வேலை செய்கிறது, கிரிமினல் சிண்டிகேட் நடத்துகிறது. அமலாக்கத்துறை வாயிலாக பா.ஜ.க. தலைவர்கள் எப்படி வசூல் செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவேன். எதிர்க்கட்சி தலைவர்கள் எப்படி அச்சுறுத்தப்படுகிறார்கள், எல்லாவற்றையும் நான் அம்பலப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சஞ்சய் ரவுத்தின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

அமலாக்கத்துறை

பா.ஜ.க.வின் அமீத் சதம் கூறுகையில், மும்பை உங்களுடைய (சஞ்சய் ரவுத்) தனிப்பட்ட சொத்தோ அல்லது யாராலும் உங்களுக்கு பரிசளிக்கப்பட்டதோ அல்ல. மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தில் உங்கள் பங்கு வெறும் தூதுவரே தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் உங்கள் வரம்புக்குள் இருக்க வேண்டும். அமலாக்கத்துறை அவரது நெருங்கிய கூட்டாளியான நிதின் ராட்டை கைது செய்தது மற்றும் மற்றொரு கூட்டாளி சுஜித் பட்கரை அம்பலப்படுத்தியதால் தான் சஞ்சய் ராவத் இது போன்ற காட்டு மிராண்டித்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் என்று தெரிவித்தார்.