மெகபூபா முப்தி என்ன பேசினாலும், அதற்கு பா.ஜ.க. தான் பொறுப்பு... சிவ சேனா

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பா.ஜ.க.வின் நல்ல நண்பர், அவர் என்ன பேசினாலும் அதற்கு பா.ஜ.க.தான் பொறுப்பு என்று சிவ சேனா தெரிவித்துள்ளது. 

ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கடந்த சில தினங்களுக்கு முன்,  காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை அமைதியை எட்ட முடியாது. எனவே ஜம்மு காஷ்மீர் மக்கள் மற்றும் பாகிஸ்தானுடன் மத்திய பா.ஜ.க. அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில், மெகபூபா முப்தியின் பேச்சுக்கு சிவ சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறியதாவது: மெகபூபா முப்தி பா.ஜ.க.வின் நல்ல நண்பராக இருந்து வருகிறார். அப்சல் குரு மற்றும் புர்ஹான் வானியை மெகபூபா முப்தி ஆதரித்த போதிலும், ஜம்மு காஷ்மீரில் அவருடன் (மெகபூபா முப்தி) இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இன்று அவர் என்ன பேசினாலும், அதற்கு பா.ஜ.க. தான் பொறுப்பு. எங்கள் கட்சி அதை தொடர்ந்து எதிர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சஞ்சய் ரவுத்

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தில் இருந்தபோது, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அம்மாநிலத்தின் கடைசி முதல்வராக  2016 ஏப்ரலில் பதவியேற்றார். பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தார். 2018ம் ஆண்டில் மெகபூபா முப்தியின் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்ப பெற்றதையடுத்து, அரசாங்கம் கவிழ்ந்தது. குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர்  மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.