பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் மோடியால் வெறுப்பு அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டதால் தவறு செய்கிறார்கள்.. ஆம் ஆத்மி

 
இனிதான் ஆட்டம் ஆரம்பம்.. குடும்ப அரசியல் நாட்டிற்கு கேடு.. - பிரதமர் மோடி கடும் தாக்கு..

பா.ஜ.க. தலைவர்களும், செய்தி தொடர்பாளர்களும் பிரதமர் மோடியால் வெறுப்பு அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டதால் தவறு செய்கிறார்கள் என ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். மேலும் நேற்று டெல்லியில் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில், சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனைகள், நுபுர் சர்மா விவகாரத்தை அமுக்குவதற்காக நடத்தப்பட்டது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

சஞ்சய் சிங்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: பா.ஜ.க. தலைவர்களும், செய்தி தொடர்பாளர்களும் பிரதமர் மோடியால் வெறுப்பு அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டதால் தவறு செய்கிறார்கள். அதன் விளைவுகளை முழு நாடும் தாங்குகிறது. இது 130 கோடி இந்தியர்களை அவமதிக்கும் செயலாகும். 

பா.ஜ.க.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனைகள், இந்த பிரச்சினையை (நுபுர் சர்மா விவகாரம்) அடக்குவதற்காக நடத்தப்பட்டது. இது சத்யேந்தர் ஜெயினுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஜெயின் சமூகத்துக்கும் அவமானம். ஜெயின் ஜி இந்தியாவின் இந்தியாவின் பெயரை ஒளிர செய்துள்ளார், எனவே பா.ஜ.க. அவரை அவமதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.