இந்துத்துவா குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை.. அது சிவ சேனாவின் இரத்தத்தில் ஓடுகிறது.. சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

இந்துத்துவா குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை அது சிவ சேனாவின் இரத்தத்தில் ஓடுகிறது என சஞ்சய் ரவுத் பா.ஜ.க.வை தாக்கினார்.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள் அகற்றுவது தொடர்பான விவகாரம் குறித்து அண்மையில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் போலி மதச்சார்பின்மை வரிசையில் உத்தவ் தாக்கரேவும் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அவர் ஒலி பெருக்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஒலி பெருக்கிகளில் ஹனுமன் பாடல் ஒலிக்கும்போது, அவை கைப்பற்றப்பட்டன. அதாவது உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்துள்ளார் என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

இதற்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார். கோலாப்பூரில் கட்சி தொண்டர்களிடம் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க.தான். நாங்கள் அவர்களை (பா.ஜ.க.) விட்டு விட்டோம், இந்துத்துவாவை அல்ல. அவர்களுக்கு இந்துத்துவாவின் காப்புரிமை இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று சிவ சேனாவின் சஞ்சய் ரவுத்தும் பா.ஜ.க.வை கடுமையாக சாடியுள்ளார்.

பா.ஜ.க.

சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்துத்துவா என்றால் என்ன என்று நமக்கு கற்பிக்கத் தேவையில்லை. இது (இந்துத்துவா) சிவ சேனாவின் ரத்தத்தில் உள்ளது. எப்பொழுதெல்லாம் இந்துத்துவா தாக்கப்பட்டதோ, அப்போதேல்லாம முன்னுக்கு வந்தது பா.ஜ.க. அல்ல. நாங்கள் தான், பாலாசாகேப் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே என்று தெரிவித்தார்.