சிவாஜி மகாராஜ் விவகாரம்.. மகாராஷ்டிரா கவர்னரை நீக்க வேண்டும், முதல்வர் பதவி விலக வேண்டும்.. சஞ்சய் ரவுத் வலியுறுத்தல்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதித்த மகாராஷ்டிரா கவர்னரை நீக்க வேண்டும் என்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் சஞ்சய் ரவுத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி  உரையாற்றுகையில், உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவரை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார், பாபாசாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம் என தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார் என்று கவர்னர் கூறியதற்கு உத்தவ் தாக்கரே சிவ சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளது. மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

பகத் சிங் கோஷ்யாரி

இது தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்  கூறியதாவது: ஒரு ஆண்டில் சிவாஜி மகாராஜை கவர்னர் நான்கு முறை அவமதித்துள்ளார். இன்னும் மகாராஷ்டிரா அரசு அமைதியாக உள்ளது. பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித் ஷாவும் சிவாஜி மகாராஜை தங்கள் லட்சிய மனிதராக கருதுகின்றனர். சிவாஜி மகாராஜ் அவுரங்கசீப்பிடம் ஐந்த முறை மன்னிப்பு கேட்டதாக அவர்களின் (பா.ஜ.க.) தேசிய செய்தி தொடர்பாளர் கூறினார். இதுதான் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா?. 

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவிடம் பா.ஜ.க. மன்னிப்பு கேட்க வேண்டும். கவர்னரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். சுயமரியாதை முழக்கம் கொடுத்து , சிவ சேனாவை உடைத்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைத்த முதல்வர் (ஏக்நாத் ஷிண்டே), இப்போது எங்கே போனது உங்கள் சுயமரியாதை? சிவாஜி மகாராஜை பா.ஜ.க. வெளிப்படையாக அவமதிக்கிறது. நீங்கள் பதவி விலக வேண்டும்.  சிவாஜி மகாராஜ் மீது உங்களுக்கு மரியாதை இருந்தால், நீங்கள் ஏன் அவர்களுடன் (பா.ஜ.க.) ஆட்சியில் இருக்கிறீர்கள்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.