மேயருக்கு கொண்டு வந்த மாலையை சாலையில் தூக்கி எறிந்த தூய்மை பணியாளர்கள்

 
aa


தீர்மானம் தங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்பிய தூய்மை பணியாளர் சங்கத்தினர் மேயருக்கு அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மாலையுடன் சென்றனர். ஆனால் தீர்மானத்தில் உடன்பாடு ஏற்படாததால் மேயருக்கு கொண்டு சென்ற மாலையை தூக்கி சாலையில் எறிந்தனர். 

கோவை மாவட்டத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.  அவர்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று மேயர் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்திருந்தார்.

ko

 இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த தீர்மானம் தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருப்பதால் தீபாவளி முடித்த பிறகு மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். 

 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  தூய்மை பணியாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வரும் வரைக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.   மாமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்பிய தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் மேயருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்து மரியாதை செலுத்துவதற்காக மாலையுடன் சென்றிருந்தனர்.  தீர்மானத்தில் தங்களுக்கு உடன்பாடு ஏற்படாதால் கொண்டு சென்ற மாலையை சாலையில் எடுத்து வீசி விட்டு சென்றார்கள்.