தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை கோரி கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.க்கள்.. நியாயமான கோரிக்கை- சந்தீப் ஆதரவு

 
சந்தீப் தீட்சித்

கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதிய  மணிஷ் திவாரி உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெளிப்படையாக மற்றும் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களான மணிஷ் திவாரி, சசி தரூர் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். 

சசி தரூர்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு, காங்கிரஸ் எம்.பி.க்கள் மணிஷ் திவாரி, சசி தரூர், கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அப்துல் கலிக் ஆகிய 5 பேரும் கூட்டாக ஒரு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், எதிர்வரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்து கவலை எழுப்பினர். மேலும்  அனைத்து வாக்காளர்களுக்கும், சாத்தியமான வேட்பாளர்களுக்கும் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியல் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

காங்கிரஸ்

கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதிய  மணிஷ் திவாரி உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்தீப் தீட்சித் கூறுகையில்,  இது உண்மையான கோரிக்கை, ஆர்வமுள்ளவர்கள் பட்டியலை பெற வேண்டும். பி.சி.சி. உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.