விஷ சாராயம் குடித்து 17 பேர் பலி.. பீகாரில் விஷ மதுபானங்களை விற்பனையில் பின்னா நிதிஷ் குமார் அரசாங்கம்.. பா.ஜ.க.

 
 சாம்ரத் சவுத்ரி

பீகாரில்  விஷ மதுபானங்களை விற்பனை செய்வதற்கு பின்னால் நிதிஷ் குமார்  அரசாங்கம் உள்ளது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. சாம்ரத் சவுத்ரி குற்றம் சாட்டினார்

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் மது விற்பனை மறைமுகமாக அமோக நடக்கிறது. அதேசமயம் ஒரு பக்கம் விஷ சாராயம் குடித்து மக்கள் இறப்பதும்  அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பீகாரின் சரண் மாவட்டத்தில் சாப்ராவில் விஷ சாரயத்தை குடித்ததில் 17 பேர் உயிர் இழந்தனர். இது பீகாரில் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துதல்

பீகார் சட்டப்பேரவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமாரை குறிவைத்து பேசினர். இதனால் நிதிஷ் குமார் நிதானத்தை இழந்தார். இதனையடுத்து பீகார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார், என்ன நடந்தது, விஷ சாராயம், நீங்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறீர்கள் என தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். இதனையடுத்து, நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சாம்ரத் சவுத்ரி கூறுகையில், மாநிலத்தில் விஷ மதுபானங்களை விற்பனை செய்வதற்கு பின்னால் நிதிஷ் குமார்  அரசாங்கம் உள்ளது. இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களால்  அவருக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.  விஷ சாராயம் எங்கியிருந்து வருகிறது என்று முதல்வர் நிதிஷ் குமாரிடம்  பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கேட்டனர். அதன் பிறகு அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.