அதே மே-7! இளைஞர் நலன், விளையாட்டுதுறை அமைச்சராகிறார் உதயநிதி

 
ud

மு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அதே மே 7ஆம் தேதியன்று உதயநிதி ஸ்டாலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

 திமுக ஆட்சிக்கு வந்ததுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.   ஆனால்  அப்போது அவர் அமைச்சர் ஆகாததால் அதன் பின்னர் சென்னை மேயராக வரப்போகிறார் என்று செய்திகள் வந்தன.   அதுவும் இல்லாமல் போனது.   

du

 உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் செய்து வரும் நலத்திட்டங்களை பார்த்து ,  இது போன்று எல்லா தொகுதி மக்களுக்கும் நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமானால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தெரிவிக்க,  அடுத்தடுத்து திமுகவின் அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவா, துணை முதல்வர் ஆவார் என்றும் தற்போது செய்திகள் வலம் வரத்தொடங்கிவிட்டன. செய்தியாளர்களும் உதயநிதியிடமே கேட்க ஆரம்பித்துவிட்டனர்.  கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பின்போது,  நீங்கள் அமைச்சராக வர வேண்டும்,  துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று  அமைச்சர்கள் விரும்புகிறார்களே.  இது முதல்வரின் கவனத்திற்கு சென்று இருக்கிறதா என்று கேட்க,   சிரித்து சமாளித்தார் உதயநிதி. ஆனாலும் உதயநிதி ஸ்டாலினை  அமைச்சராக்குவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன என்று தகவல்.

uud

 கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதியன்று மு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.  கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வருவதை முன்னிட்டு அந்த நிகழ்வை பிரமாண்டமாக கொண்டாட  முதலில் முடிவெடுத்து இருந்தனர்.  ஆனால் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அந்த பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா என்கிற திட்டத்தை கைவிட்டனர்.

ust

 இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவு பெற இருக்கிறது.   வரும் மே 7ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்த நாள்.  அதனால் அதை கொண்டாட முடிவு எடுத்திருக்கிறார்கள்.   ஆனால் அன்றைய தினம் இரட்டை கொண்டாட்டமாக அமைய போகிறது என்கிறார்கள்.  உதயநிதியை அமைச்சர் ஆக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகின்றன என்கிறார்கள் .  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வரும் நிலையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரவார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள்.

உதயநிதி  அமைச்சராவதை முன்னிட்டு அவருக்கு புது கார் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனவாம்.