அமெரிக்க அதிபரும் தன்னை பார்த்து பயப்படுவதாக ஆம் ஆத்மி தலைவர் கூறாதது ஆச்சரியம்... கெஜ்ரிவாலை கிண்டலடித்த பத்ரா

 
ராகுல் காந்தி தோல்வியுற்ற அரசியல்வாதி.. அவரது அறிக்கைகள் விரக்தியின் வெளிப்பாடு… சம்பிட் பத்ரா தாக்கு

அமெரிக்க அதிபர்  ஜோ பைடனும் தன்னை பார்த்து பயப்படுவதாக  ஆம் ஆத்மி தலைவர் கூறாதது ஆச்சரியம் என்று அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா கிண்டல் செய்தார்.

ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் மாநாட்டில் பேசுகையில், குஜராத்தில் எங்கள் கட்சிக்கு அதிகரித்து வரும் பிரபலத்தை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியாததால் மோடி அரசு ஆம் ஆத்மி கட்சி அமைச்சசர்கள் மற்றும்  தலைவர்களை பொய்யான ஊழல் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிக்கிறது. வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி பயம் இருப்பதால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் ஆம் ஆத்மியை நசுக்க பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் முயற்சி  செய்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார்.  

இன்று முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.பா.ஜ.க.வின்  செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ஒவ்வொரு மாநில வாக்கெடுப்புக்கும் முன்பு செய்யும் பழைய நாடகத்தை நாடுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதுமே மாநில தேர்தலுக்கு முன் தனது கட்சி வெற்றி பெறுவதாகவும், மற்றவர்கள் திணறுவதாகவும் கூறுகிறார். 

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனுக்கு காயம்!

நீதித்துறையை விட நேர்மை மற்றும் நேர்மையின்மை குறித்த கெஜ்ரிவாலின் சான்றிதழே முக்கியமானது என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர்  ஜோ பைடனும் தன்னை பார்த்து பயப்படுவதாக  ஆம் ஆத்மி தலைவர் கூறாதது ஆச்சரியம். இமாச்சில பிரதேசத்தில் ஆம் ஆத்மி சிதைந்து விட்டது. உத்தரகாண்டில் அதன் தலைவர் கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால் இந்த மாநிலங்களில் தனது கட்சியின் வாய்ப்புகள் குறித்து கெஜ்ரிவால் உயர்ந்து கூற்றுகள் சொல்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.