அகமது படேல் மூலம் சோனியா காந்தி குஜராத்தின் இமேஜை கெடுக்க, மோடியை அவமதிக்க முயன்றார்... பா.ஜ.க. குற்றச்சாட்டு..

 
சோனியா காந்தி

அகமது படேல் மூலம் சோனியா காந்தி குஜராத்தின் இமேஜை கெடுக்க முயன்றார். அவர் மூலம் நரேந்திர மோடியை அவமதிக்க முயன்றார் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 2002 கலவரத்துக்கு பிறகு மாநிலத்தில் பா.ஜ.க. அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய அகமது படேலின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட பெரிய சதியன் ஒரு பகுதியாக செடல்வாட் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்தியை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறியதாவது: குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 

ராகுல் காந்தி தோல்வியுற்ற அரசியல்வாதி.. அவரது அறிக்கைகள் விரக்தியின் வெளிப்பாடு… சம்பிட் பத்ரா தாக்கு

டீஸ்டா செடல்வாட் மனித குலத்துக்காக பாடுபடவில்லை, அரசியல் நோக்கங்களுடன் பணியாற்றினார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்படுத்தவே இந்த சதி நடந்துள்ளது என்பதை பிரமாணப்பத்திரம் காட்டுகிறது. சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த அகமது படேல்,  மாநிலத்தில் பா.ஜ.க. அரசாங்கத்தை சீர்குலைக்கவும், பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தவும் முயற்சித்த ஊடகம்தான் அவர்.

மறைந்த. அகமது படேல்

அகமது படேல் என்பது வெறும் பெயர்தான், இந்த சதிக்கு உந்து சக்தியாக இருந்தவர் அவரது தலைவர் சோனியா காந்தி. தனது தலைமை ஆலோசகர் அகமது படேல் மூலம் சோனியா காந்தி குஜராத்தின் இமேஜை கெடுக்க முயன்றார். அவர் மூலம் நரேந்திர மோடியை அவமதிக்க முயன்றார். மேலும் அவர் இந்த முழு சதிக்கும் சிற்பி. மோடிக்கு எதிராக சோனியா காந்தி ஏன் சதி செய்கிறார் என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.