விசாரிக்கப்படாமல் இருக்க இந்த நாட்டில் யாரும் விக்டோரியா ராணியோ அல்லது இளவரசரோ இல்லை.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க.

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு

விசாரிக்கப்படாமல் இருக்க இந்த நாட்டில் யாரும் விக்டோரியா ராணியோ அல்லது இளவரசரோ இல்லை என பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு எதிரான அக்னிபாத் திட்டம் மற்றும் பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் விசாரிக்கப்பட்டு வரும்  ராகுல் காந்தியை குறிவைத்து  மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவில் ஊழல் நடந்தால், யாராக இருந்தாலும் நீங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது என காங்கிரஸூக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

சம்பிட் பத்ரா

இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பிட் பத்ரா கூறியதாவது: விசாரிக்கப்படாமல் இருக்க இந்த நாட்டில் யாரும் விக்டோரியா ராணியோ அல்லது இளவரசரோ இல்லை, சட்டம் அனைவருக்கும் சமம். ஊழலுக்காக அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். நேஷனல் ஹெரால்டு ஊழலின் மூலம் நாட்டின் பணத்தை தவறாக பயன்படுத்தியதில் ஒரு குடும்பம் மற்றும் ராகுல் காந்தியின் பங்கு பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள். ஊழல் செய்தால் விசார நடத்துவது இயல்பு. 

அமலாக்கத்துறை

இ.டி. என்பது அமலாக்க இயக்குனரகம் என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும், உரிமை கோரிக்கை அல்ல. நாங்கள் முதல் குடும்பத்தை என்றும், நாங்கள் எப்படி விசாரிக்கப்படுகிறோம் என்று காங்கிரஸ் உரிமை கோருகிறது. காங்கிரஸின் உயர்மட்ட வழக்கறிஞர்களும் இ.டி. விசாரணைக்கான கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றனர். ஆனால் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்தியாவில் ஊழல் நடந்தால், யாராக இருந்தாலும் நீங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.