நீங்கள் நினைக்கும் இடத்துக்கு செல்லலாம்.. சித்தப்பா, ஓம் பிரகாஷ் ராஜ்பரை கூட்டணியிலிருந்து கழட்டி விட்ட அகிலேஷ்
நீங்கள் நினைக்கும் இடத்துக்கு செல்லலாம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் தனது கூட்டணியில் இடம் பெற்று இருந்த தனது சித்தப்பா சிவ்பால் யாதவ், ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தேர்தலுக்கு பின்பும் இந்த கூட்டணி நீடிக்கிறது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக தனது கூட்டணி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் சமாஜ்வாடி-சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதன் விளைவாக சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார். இருப்பினும் கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கூட்டணியில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் சிவ்பால் யாதவ் சமாஜ்வாடி கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இருப்பினும் அகிலேஷ் யாதவுக்கும், சிவ்பால் யாதவுக்கும் இடையே மனகசப்பு இருந்து வந்தது. இதனால் இந்த கூட்டணியும் பிரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அண்மையில நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமயிலான சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கட்சியும், சிவ்பால் யாதவ் கட்சியும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் சமாஜ்வாடி கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான பிளவு மேலும் பெரிதானது. இந்நிலையில், இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கும், சிவ்பால் யாதவுக்கு கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்பதை மறைமுகமாக உங்களுக்கு அதிக மரியாதை கிடைப்பதாக நீங்கள் நினைக்கு இடத்துக்கு செல்ல நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்று சமாஜ்வாடி கடிதம் எழுதியது.
சமாஜ்வாடி கட்சி சிவ்பால் யாதவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீங்கள் விரும்பும் இடத்துக்கு செல்ல உங்களுக்கு (சிவ்பால் யாதவ்) சுதந்திரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு சமாஜ்வாடி எழுதியுள்ள கடிதத்தில், ராஜ்பருக்கு பா.ஜ.க.வுடன் புரநி்துணர்வு உள்ளது என்றும், பா.ஜ.க.வை மாநிலத்தில் வலுப்படுத்த பாடுபடுவதாகவும் சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், உங்களுக்கு அதிக மரியாதை கிடைப்பதாக நீங்கள் நினைக்கும் இடத்துக்கு செல்ல நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்.