நீங்கள் நவராத்திரியில் இறைச்சி சாப்பிடவில்லை என்றால் மற்றவர்களை ஏன் தடுக்கிறீங்க?... சல்மான் நிஜாமி கேள்வி

 
இறைச்சி கடை

நவராத்திரியின்போது இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று தகவல்களை குறிப்பிட்டு, நீங்கள் நவராத்திரியில் இறைச்சி சாப்பிடவில்லை என்றால் மற்றவர்களை ஏன் தடுக்கிறீங்க? என காங்கிரஸின் சல்மான் நிஜாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று தெற்கு டெல்லி மாநகராட்சி மேயர் முகேஷ் சூர்யன், இன்று முதல் இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தார். மேலும், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், தனது உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், நவராத்திரி பண்டிகையின்போது இறைச்சி கடைகள் இயங்காது என ஒப்புக்கொண்டால் , இறைச்சி கடைகள் நடத்துவதற்கான உரிமம் எதிர்காலத்தில் வழங்கப்படும் என மேயர் முகேஷ் சூர்யன் தெரிவித்தார்.

சல்மான் நிஜாமி

உத்தர பிரதேசத்தில் அலிகாரில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஜய் சிங் கடந்த 2ம் தேதியன்று, நவராத்திரி பண்டிகையின் போது மாவட்ட பஞ்சாயத்துக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூடுமாறு உத்தரவிட்டார். நவராத்திரியின் போது இறைச்சிகளை மூட வேண்டும்  கூறியிருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்நிலையில், நவராத்திரியின் போது இறைச்சி விற்பனையை மூட வேண்டும் என்றால், புனித ரமலான் காலத்தில் மதுவை ஏன் தடை செய்யக்கூடாது?  என காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுபான கடை

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சல்மான் நிஜாமி டிவிட்டரில், நவராத்திரியின் போது இறைச்சி விற்பனையை மூட வேண்டும் என்றால், புனித ரமலான் காலத்தில் மதுவை ஏன் தடை செய்யக்கூடாது? நீங்கள் நவராத்திரியில் வெங்காயம் அல்லது இறைச்சி சாப்பிடவில்லை என்றால் மற்றவர்களை ஏன் தடுக்க வேண்டும். இதுதான் ஜனநாயகமா? எங்கள் உணர்வுகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் பற்றி என்ன என்று பதிவு செய்துள்ளார்.