ராகுல் காந்தி காங்கிரஸின் முழுநேர தலைவராக பொறுப்பேற்பார்.. சல்மான் குர்ஷித் நம்பிக்கை

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி காங்கிரஸின் முழுநேர தலைவராக பொறுப்பேற்பார் என சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அந்த கட்சிக்குள் கட்சி தலைமைக்கு (சோனியா காந்தி குடும்பம்) எதிராக அதிருப்தி குரல்கள் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சல்மான் குர்ஷித்

சல்மான் குர்ஷித் கூறியதாவது: காந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கும் காரணி, இந்த நெருக்கடியான தருணத்தில் காந்தி குடும்பம்தான் சிறந்த தலைமை தேர்வு. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் பல தலைவர்கள் விரும்புகின்றனர். உள்கட்சி தேர்தலுக்கு பிறகு அவர் காங்கிரஸின் முழுநேர தலைவராக பொறுப்பேற்பார் என்று நான் நம்புகிறேன்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

கபில் சிபல் கட்சியிடமிருந்து பெரிய அளவில் பலன் அடைந்து விட்டு, தற்போது புகார் செய்வது வருத்தமாக இருக்கிறது. கட்சிக்குள் நிலவும் விரிசல் கட்சிக்கு உதவாது. பா.ஜ.க.வுக்குத்தான் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்சி தலைமையை விமர்சனம் செய்த கபில் சிபலை காங்கிரஸின் மல்லிகார்ஜூன் கார்கேவும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், கபில் சிபல் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருக்கலாம் ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் நல்ல தலைவர் அல்ல. அவர் காங்கிரஸூக்கு வேலை செய்ய எந்த கிராமத்திற்கும் சென்றதில்லை. வேண்டுமென்றே கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். சோனியா காந்தியையே அல்லது காங்கிரஸையோ யாராலும் பலவீனப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.