பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுத்ததால் காங்கிரஸ் தலைமை குறிவைக்கப்படுகிறது... சச்சின் பைலட் குற்றச்சாட்டு

 
கோட்டா குழந்தைகள் இறப்பு…. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை… காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட்

பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுத்ததால் காங்கிரஸ் தலைமை குறிவைக்கப்படுகிறது என சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அண்மையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால் ஆஜராக காலஅவகாசம் கோரியிருந்தார். அதேசமயம் ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரிக்கப்பட்டு வருகிறார். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவரும், அம்மாநில எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் இருப்பவர்கள் அதிருப்தியாளர்களை குறிவைக்கிறார்கள். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறது. இது திருமதி காந்தி அல்லது ராகுல் காந்தியை பற்றியது மட்டுமல்ல, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும். 

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுத்ததால் காங்கிரஸ் தலைமை குறிவைக்கப்படுகிறது. வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என ஏஜென்சிகள் மூலம் வந்து தாக்குகிறார்கள். அவர்கள் (விசாரணை அமைப்புகள்) ஆட்சியில் இருக்கும் கட்சியின் கருவிகளாக மாறி விட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.