கடத்தல் ஜோசப் உடன் உதயநிதிக்கு என்ன உறவு ? ஸ்டாலின் மாப்பிள்ளை கிட்ட 4 கோடி மதிப்பில் உள்ள வாட்ச் மட்டும் 20 இருக்கு - சவுக்கு சங்கர் விளாசல்

 
sa

பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்று கேட்டிருந்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

au

அவர் மேலும்,  வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள்,10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்.  என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர்  நரேந்திரமோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.  

sa

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.   நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்’’என்று தெரிவித்திருந்தார்.

உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி,  ‘’சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?’’என்று கேட்டிருக்கிறார்.

sa

இதற்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்,  ‘’
1) காலேஜ் முடிச்ச பையனுக்கு ஏது ஹம்மர் ?  கடத்தல் ஜோசப் உடன் உதயநிதிக்கு என்ன உறவு ? 
2) ரெட்ஜெயண்ட் தொடங்க முதலீடு ஏது ?
3) 2011 முதல் 2021 வரை  அமைதி.   ஆட்சிக்கு வந்ததும் ஏது இவ்வளவு படம் ? 
4) உதயநிதியின் 10 ஆண்டு வருமான வரிக் கணக்கு என்ன ? 
இப்படி கேக்கணும் அண்ணாமலை’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும்,  ‘’இவங்க வீட்டு மாப்பிள்ளை சபரீசன் கிட்ட 2 முதல் 4 கோடி வரை மதிப்பில் உள்ள வாட்ச் மட்டும் 20 இருக்கு.  இவனுங்க வாட்ச் பத்தியெல்லாம் பேசலாமா ?   
மொதல்ல, சென்னையில இந்த குடும்பத்துக்கு எத்தனை வீடுன்னு கணக்கெடுங்க.  சித்தரஞ்சன் சாலை, வேளச்சேரி, உளுந்தை 100 ஏக்கர் நிலம்..’’என்று அடுக்கிக்கொண்டே போகலாம் என்கிறார்.

’’சரி அவ்வளவு வெளிப்படையான ஆளுதானே நீங்க.  2011 முதல் உங்கள் மற்றும், உங்க தம்பி அசோக் வருமான. வரி ரிட்டர்ன்ஸ் வெளியிடுங்க பாலாஜி. பாப்போமே உங்க வெளிப்படைத்தன்மையை’’என்றும் கேட்டிருக்கிறார் தடாலடியாக.