ரூ. 5க்கு 3 வேளையும் உணவு - 100 இடங்களில் அன்னபூர்ணா உணவகம்

 
b

குஜராத் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அன்னபூர்ணா உணவகம் அமைக்கப்பட்டு தலா ஐந்து ரூபாய்க்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது பாஜக. 

  குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் ஒன்று மற்றும்  ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன.  தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன.  இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி வருகின்றன. 

m

  குஜராத் தேர்தலை முன்னிட்டு பாஜகஇன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குஜராத் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும்,  பெண்களுக்கு ஒரு லட்சம்  அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் , குஜராத்தில் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் வசதி வழங்கப்படும்,  பெண் குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் பிளஸ் டூ  வரை பயிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் , அன்னபூர்ணா உணவகம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் உணவகம் அமைக்கப்படும்.  இந்த உணவகத்தில் தலா ஐந்து ரூபாய்க்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர்.