எடப்பாடிக்கு விழுந்த அடி! தேர்தல் ஆணையம் சொன்ன ஷாக் பதில்

 
eeepp

அதிமுக சட்டவிதிகள் மாற்றப்படவில்லை; மாற்றக்கோரி எந்த கடிதமும் பெறப்படவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சொன்ன பதிலைக்கேட்டு எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

இரட்டைத் தலைமையில் இயங்கி வந்த அதிமுகவை தனது ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வர அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றி பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  ஆனால் அதிமுகவில் சட்ட விதிகள் மாற்றக்கூடாது . மாற்றப்படவும் முடியாது என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது தரப்பினரும் உறுதியாக சொல்லி வருகின்றனர்.

ep

 இந்த நிலையில் அதிமுக சட்ட விதிகள் மாற்றப்படவில்லை மாற்றப்பட சொல்லி எந்த கடிதமும் பெறப்பப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலால் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ஆட்டம் கண்டு போயிருக்கிறார்கள்.  

 கடந்த 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அந்த பொதுக்குழு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உரிமைகள் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ளன.

 இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த சாக்ரடிஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டிசம்பர் 2021 க்கு பின்னர் அதிமுக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? என்று தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று கேள்வி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.  அதற்கு கடந்த ஜூலை 18ஆம் தேதி அன்று அவருக்கு பதில் அளித்து இருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் .  அந்த பதிலில்,  அதிமுக சட்ட விதிகளை மாற்றக் கோரி அதிமுக சட்டவிதிகள் மாற்றப்படவில்லை.  மாற்றக்கோரி எந்தவிதமான கடிதமும் பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளது .

e

 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு பின்னர் மீண்டும் 11ஆம் தேதி சிறப்பு பொது குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இந்த அறிவிப்பும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது .  ஆனால் அதிமுகவில் செய்யப்பட்டிருக்கின்ற மாற்றங்களை ஏற்கக் கூடாது என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு அன்றைய தினமே கடிதம் எழுதி இருந்தார் .   இந்த நிலையில் யாருடைய கடிதம் தேர்தல் ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.