பதவியேற்றதும் அதிரடி காட்டிய ரிஷி சுனக்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், பதவியேற்றதும் அதிரடி காட்டி இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார். இங்கிலாந்தின் 57 வது பிரதமராக பதவி ஏற்றுள்ள 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.,ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பதவி ஏற்றதும் அதிரடி காட்டியிருக்கிறார் ரிஷி. புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பான முடிவில் இறங்கி இருக்கிறார். இதை அடுத்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இருந்த பலரையும் ராஜினாமா செய்யுமாறு கூறியிருக்கிறார். மூன்று அமைச்சர்கள் பதவி விலகப் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். நிதியமைச்சர் மட்டும் பதவியில் நீடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .
இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வேன் என்று உறுதியளித்திருக்கிறார் ரிஷி.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு .க. ஸ்டாலின் ரிஷிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின்
’’இங்கிலாந்தின் பிரதமர் ஆனதற்கு வாழ்த்துகள் ரிஷி சுனக்’’என்று தெரிவித்திருக்கும் ஸ்டாலின், ‘’இங்கிலாந்தின் பிரதமராக நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்டது பன்முகத்தன்மைக்கான வெற்றியாகும்’’ என்று தெரிவித்திருக்கிறர்.
மேலும் , ’’உங்களின் வெற்றி இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறேன்’’என்று கூறியிருக்கிறார்.