இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்

 
ர்

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 இங்கிலாந்தின் பிரதமராக கடந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று லிஸ் டிரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஆனால் லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன .  இதனால் கடந்த 20 ஆம் தேதி அன்று பிரதமர் பதவியில் இருந்து திடீரென்று விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்து ஆளும் கன்சர்வேடிங் கட்சியின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.   இந்த போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்,  முன்னாள்  நிதியமைச்சர் ஆன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகியோர் இருந்தார்கள்.  நாடாளுமன்ற  மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்திலும் குதித்தார்.  

ரி

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணி நேரம் இருக்கும்போது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் போரிஸ் ஜான்சன்.  ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது.   பென்னி மார்டண்ட் 100 எம்பிக்கள் ஆதரவை இன்னும் பெறவில்லை.  

 இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு பென்னி மார்டண்ட் 100 எம்பிக்களின் ஆதரவினை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டி  இன்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார்.   இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால் பென்னி மார்டண்ட்டுக்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.

  இந்த நிலையில் பென்னி மார்டண்டிற்கு 100 எம்பிக்களின் ஆதரவு கிடைக்காததால் அவர் பிரதமர் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.  இதனால் இங்கிலாந்தின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.