ஓபிஎஸ்சுடன் மீண்டும் இணைவது சாத்தியமல்ல - பாஜகவிடம் எடப்பாடி திட்டவட்டம்

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட பாஜக மேலிடம் விரும்புவதாக தகவல் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் ஓபிஎஸ் உடன் மீண்டும் இணைவது என்பது சாத்தியமல்ல. இனி இரட்டைத் தலைமை சரிவரது என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவை ஒற்றை தலைமைக்கு கொண்டு வர எடப்பாடி எல்லாம் முயற்சிகளையும் எடுத்து வந்த நிலையில் , இரட்டை தலைமை தான் வேண்டும். ஒற்றை தலைமைக்கு அதிமுக வரக்கூடாது என்று எத்தனையோ போராட்டங்களை நடத்தி பார்த்தும் கூட ஓபிஎஸ்சி போராட்டங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கிவிட்டு அதிமுகவே ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வந்து இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் அலுவலக சாவியும் எடப்பாடி இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பொருளாளராக இருந்த ஓபிஎஸ்சை நீக்கி விட்டு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து விட்டார் எடப்பாடி. இதை வங்கிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பாஜக மேல் இடத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி.
டிடிவி தினகரனின் அமமுக கட்சியால் தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பதிப்பு ஏற்பட்டது. வாக்குகள் சிதறின. இப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் என்று அதிமுகவில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டால் மேலும் வாக்குகள் சிதறும் . இது திமுகவிற்கு தான் சாதகமாக அமையும் லாபமாக போய்விடும். அதனால் ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று எடப்பாடியிடம் பாஜக வலியுறுத்தி இருக்கிறது.
2024 நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றும், அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறதாம். அதனால் ஓபிஎஸ் -இபிஎஸ் மோதல் ஏற்பட்ட உடனேயே பிரச்சினைகளை சமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளுமாறு இருதரப்பையும் கேட்டுக் கொண்டிருக்கிறது பாஜக மேலிடம். ஆனால் இந்த மோதல் வலுத்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில் இனி இரட்டை தலைமை சரிவராது ஓபிஎஸ்க்கு இரண்டு சதவீத ஆதரவு மட்டுமே கட்சியில் இருக்கிறது. அவர் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறார். அவரால் இனி கட்சிக்கு எந்த முன்னேற்றமும் இருக்காது. அதனால் மீண்டும் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் எடப்பாடி.