ராஜினாமா செய்யணும்- சொந்த கட்சியினரே அமைச்சர் அன்பிலுக்கு எதிராக முழக்கம்

 
ab

 அமைச்சர் அன்பில் மகேசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர் திமுகவினர்.   திமுகவினரே திமுக அமைச்சரை ராஜினாமா செய்யச்சொல்லி வலியுறுத்தி வருவதால் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

 தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி இயங்கி வருகிறது.   இதன் செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதியை நியமித்து உத்தரவிட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறை.  முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பரும் தென் மாவட்ட தொழிலதிபருமான ஒருவர்,  மணிகண்ட பூபதியை நியமிக்கும்படி அமைச்சர் மகேஷிடம் பரிந்துரை செய்துள்ளார்.

an

ஆனால்,  மணிகண்ட பூபதி கல்வித்துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர் எனச் சொல்லி அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.  அதனால் அவர் நியமன உத்தரவை பெறாமல் வெளியூர் சென்று விட்டார்.   இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

 இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுகவினரும், திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

 காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சயா பாத்ரா என்னும் ஆர்எஸ்எஸ் துணை நிறுவனத்திற்கு வழங்கிய பழனிச்சாமிக்கும்,  கல்வி டிவியை மணிகண்ட பூபதிக்கு வழங்கிய உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.  அதனால் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் . திமுகவினர் யாராவது அரசு வேலை கேட்டால் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தான் நியமனம் எனச் சொல்லும் அரசு,  பெரிய பதவியில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை நியமித்திருப்பது நியாயமா என்று கேள்விகளை கேட்டு அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.