ராஜினாமா..? எடப்பாடி தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு

 
எப்ச்

 எடப்பாடி தனக்குத்தானே வைத்துக் கொண்டு ஆப்பு பற்றி தெரிய வந்ததும்,  இப்படி ஒரு சிக்கலை வைத்துக் கொண்டுதான் ஒன்று சேர முடியாது என்று அத்தனை வீராப்பு காடினாரா எடப்பாடி என்று கிண்டலடிக்கிறது ஓபிஎஸ் வட்டாரம்.  தனக்குத் தானே வைத்துக் கொண்ட அந்த ஆப்பை எடுக்க சிவி சண்முகம் மூலம் தீவிர முயற்சியில் இருக்கிறாராம் எடப்பாடி.

எ

அதிமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும் ஜெயலலிதாவால் முதல்வர் என்று அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்.  ஆனால்  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவோ ஓபிஎஸ் தலைமையை விரும்பாமல் தானே தலைமையேற்று முதல்வராவதாக முடிவெடுத்தார்.  அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருந்ததால் முதல்வர் பொறுப்பை செங்கோட்டையனிடம் வழங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்.  அதற்கு சசிகலா சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.  குறிப்பாக  நிறைய விட்டமின்கள் கேட்டதாக சொல்கிறார்கள்.   எம்.எல்.ஏக்களுக்கும், மா.செக்களுக்கும் அள்ளி  இறைத்து அவர்களை ஊக்கப்படுத்தவே கேட்டிருக்கிறார் என்கிறார்கள். 

 நிபந்தனைகளுக்கு செங்கோட்டையன் ஒத்து வராததால்,  சசிகலா போட்ட அத்தனை நிபந்தனைகளுக்கும் தான் தயார் என்று முன்வந்து நின்ற எடப்பாடியை முதல்வர் ஆக்கினார் சசிகலா.  அதன் பின்னர் முதற்கட்டமாக சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினார் எடப்பாடி.  பின்னர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ்யும் ஓரங்கட்டி விட்டு ஒட்டுமொத்த அதிமுகவிற்கும் பொதுச்செயலாளராக வேண்டும் என்று முடிவு எடுத்து அதற்கான காய்களை நகர்த்தி வந்திருக்கிறார் எடப்பாடி.

எப்

   அதன்படியே மெல்ல மெல்ல ஓபிஎஸ் பக்கம் இருந்த ஆதரவாளர்கள் எல்லோரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ஓபிஎஸ்ஐ ஓரம் கட்டி விட்டு தனது ஆதரவாளர்களுக்கு நிறைய விட்டமின்கள் கொடுத்து அவர்களை உற்சாகத்துடன் வைத்திருந்து பொதுக்குழுவை கூட்டி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்றும் அறிவித்துக் கொண்டார். 

 இடைக்கால பொதுச் செயலாளர் என்று தன்னை அறிவித்துக் கொண்டதும்   அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர்,  பொருளாளர் என்று அனைத்து பொறுப்புகளும் மாற்றப்பட்டன.   தான் இடைக்க இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு பெற்றதால் முன்னர் வகித்து வந்த  இணை ஒருங்கிணைப்பாளர்,  தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளை தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அதிமுகவின் பதிவு ஆவணங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 இதை அடுத்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர்,  தலைமை நிலைய செயலாளர் பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தாமாக முன்வந்து விலகி விட்டதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.  இது ராஜினாமாவுக்கு ஒப்பானது என்கிறார்கள்.

ச்வ்

 இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்,  எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது.  அதில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்று கூறியிருப்பதோடு,  அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.   அதன்படி பார்த்தால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம்.   இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.   ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர் , தலைமை நிலைய செயலாளர்  பதவியில் இருந்து தாமாகவே நீக்கம் செய்து கொண்டதால் தற்போது எடப்பாடிக்கு சிக்கல் வந்திருக்கிறது. 

 இதனால் அவர் படு அப்செட்டில் இருக்கிறாராம்.   தனது தீவிர ஆதரவாளர் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மூலமாக அந்த பிரமாண பத்திரத்தை திரும்ப பெற முயற்சித்து வருகிறாராம்.   இந்த தகவல் ஒபிஎஸ் தரப்புக்கு  தெரிந்ததும் இப்படி ஒரு சிக்கலை வைத்துக் கொண்டுதான் ஒன்று சேர முடியாது என்று அத்தனை வீராப்பு பேசினாரா எடப்பாடி கிண்டலடிக்கிறது ஓபிஎஸ் வட்டாரம்.