குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி வைத்திருக்கும் சோனியா காந்தி... வங்கி கணக்கு ரூ.10 அனுப்பிய பா.ஜ.க. தலைவர்

 
சோனியா காந்தி

சோனியா காந்தி தான் வசிக்கும் அரசு பங்களாவுக்கு வாடகை பாக்கி வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தள்ளது.

அரசுக்கு சொந்தமான  வீடுகள் உள்ளிட்ட சொத்துகளில் குடியிருக்கும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை குறித்து விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சமூக ஆர்வர் சுஜித் படேல் கேட்டு இருந்தார். அதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தகவல்களின்படி, டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அந்த கட்சி கடைசியாக 2012 டிசம்பரில் வாடகை செலுத்தியது. ஆனால் அதன் பிறகு வாடகை செலுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மொத்தம் ரூ.12.69 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது.

சோனியா காந்தி வசிக்கும் அரசு பங்களா

எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு ரூ.4,610 வாடகை நிலுவையில் (பாக்கி) உள்ளது. கடைசியாக  2020 செப்டம்பரில் அந்த வீட்டுக்கு வாடகை செலுத்தியுள்ளனர். சாணக்யபுரியில் உள்ள பங்களா எண் c-11/109 சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளரான வின்சென்ட் ஜார்ஜ் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பங்காளவுக்கான வாடகை பாக்கி ரூ.5.07 லட்சம் காட்டுகிறது. இந்த பங்களாவுக்கு கடைசியாக 2013 ஆகஸ்டில் வாடகை செலுத்தப்பட்டுள்ளது. சோனியா தான் வசிக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி வைத்திருப்பதை பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.

தஜிந்தர் பால் சிங் பக்கா

பா.ஜ.க.வின் தஜிந்தர் பால் சிங் பக்கா டிவிட்டரில், தேர்தல்களில் தோல்வியடைந்த சோனியா காந்தியால் தனது வீட்டு வாடகையை செலுத்த முடியவில்லை. அது வெளிப்படையாக தெரிகிறது. ஏனென்றால் அவரால் இப்போது மோசடிகள் செய்ய முடியாது. ஆகையால் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி ஒரு மனிதனாக அவருக்கு உதவ விரும்புகிறேன். நான் #soniagandhireliedfund என்ற பிரச்சாரத்தை தொடங்கினேன். அவரது கணக்கு ரூ.10 அனுப்பினேன். அனைவரும் அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி  அக்பர் சாலை அலுவலகம் மற்றும் இன்னும் இரண்டு பங்காளக்களை 2013ம் ஆண்டுக்குள் காலி செய்ய வேண்டியிருந்தது. ஆனால்  இதுவரை பல நீட்டிப்புகளை எடுத்துள்ளது. தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தங்குவதற்கு அனுமதிக்கும் வீட்டுவசதி விதிகளின்படி, ஒவ்வொரு கட்சிக்கும் சொந்த அலுவலகம் கட்ட 3 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகு அரசு பங்காளக்களை காலி செய்ய வேண்டும். 2010 ஜூனில் காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் கட்டுவதற்காக 9-a ரோஸ் அவென்யூவில் நிலம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.