ரெடி! உதயநிதிக்கு இரண்டு நாற்காலிகள்

 
uச்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராகிறார்.   நாளை காலையில் 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

 உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதால் தலைமைச் செயலகத்தில் பழைய கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் அவருக்கு அறையும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. நாற்காலியும் தயார் செய்யப்பட்டு விட்டது.   ஆனால் அவருக்கு எந்த துறை ஒதுக்குவது என்பதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது.

உ

 திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதால்  உதயநிதிக்கு ஒதுக்கப்படும் துறை முக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இருக்கிறது.  அதனால் மற்ற அமைச்சர்களிடம் உள்ள முக்கிய துறையை பிடுங்கி உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்து விடலாம் என்ற ஆலோசனை நடந்திருக்கிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வசம் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் இருக்கும் கனிமவளத்துறை, நிதியமைச்சர் தியாகராஜன் வசம் இருக்கும் மனித வள மேலாண்மை துறை,   மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆகியவற்றில் ஒன்றை உதயநிதி வழங்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்திருக்கிறது .  

அச்ச்

அதே நேரம், மூத்த அமைச்சர்களிடம் இருந்து இந்த துறைகளை பிடுங்கினால் ஏதும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்? முதல்வர்.

 பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அண்மையில் தென்காசிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார் முதல்வர்.   அவருடன் அமைச்சர்கள் கே. என். நேரு,  ஐ.பெரியசாமி ஆகியோரும் சென்ட்ரல் ரயிலில் பயணம் செய்த போது , அவர்களிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறையை அமைத்துக் கொடுக்கலாம். எந்த துறையை மாற்றி அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து இருக்கிறார் முதல்வர். 

 எந்த சிக்கலும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை  வழங்கி விடலாம் என்றும் ஒரு முடிவு இருக்கிறதாம்.  இதற்காக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அவருக்கு ஒரு அறையை தயார் செய்யும் பணியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது என்கிறார்கள்.