தொண்டர்களின் ஆதரவை பெற ஓபிஎஸ் பேரம் பேசுகிறார்- ஆர்.பி. உதயகுமார்

 
rb udhyakumar

அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, எதிர்காலத்தை தொலைத்துவிட்ட ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்தி கொள்ள மௌனயுத்தலிருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளதாக 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவற், "அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள மௌன யுத்தத்தை தொடங்கியவர் தற்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார். ஓபிஎஸ்சும் அவரது புதல்வர்களும், தொண்டர்கள் ஆதரவை பெற பதவி,பணம் என விலை பேசி வரும் நடவடிக்கைகள் தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது,

இதுபோன்று தொண்டர்களின் எதிர்காலம் குறித்து எத்தனை முறை பேசி உள்ளீர்கள், தற்பொழுது எந்த உரிமையோடு பேசுகிறீர்கள் என்பதை விளக்கிச் சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும், தொலைத்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற முயற்சி செய்ய தொண்டர்களை தவறாக எடை போட்டு விடாதீர்கள், நீங்கள் விடும் அழைப்பு ஒவ்வொன்றும் உங்களுக்கு பின்னடைவை  தந்து கொண்டிருக்கும், நீங்கள் விலை பேசும் வியாபார தந்திரத்தை கவலையும், வேதனை அளிப்பதாக தொண்டர்கள் பேசுகிறார்கள், தொண்டர்களின் ஆதரவை பெற, தன் சுயநலத்தால் ஆசை வார்த்தை கூறி பேரம் பேசுவது உங்களுக்கு தரம் தாழ்ந்த செயலாகும், சுயநலத்தால் எதிலும் வெற்றி பெற முடியாது, அதுக்கு பல உதாரணங்களை சொல்லலாம் தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உங்களுக்கு சொந்தமான கிணற்றை மக்களின் குடிநீருக்காக அன்பளிப்பாக தருகிறேன் என்று கூறிவிட்டு, பின்பு வேறுநபருக்கு விற்பனை செய்த பொழுது பொதுமக்கள் உங்களை எதிர்த்து காலி குடத்துடன் ரோட்டில் போராட்டம் நடத்தினார்கள்,

உங்களுக்கு எதிராக பல்வேறு மோதல்கள் வெடித்தது, நீங்கள் துணைமுதலமைச்சராக இருந்த பொழுது தான் இது நடைபெற்றது, அது உங்களின் சுயநலத்திற்கு ஒரு சான்றாகும்" எனக் கூறினார்.