ஓபிஎஸ் ஏன் சொந்த வீட்டில் திருடினார்? ஆர்பி உதயகுமார்

 
rb udhyakumar

மதுரை அடுத்த திருமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். 
 

அப்போது பேசிய அவர்,"ஒபிஎஸ் போக்குவரத்து நெரிசலால் பொதுகுழு போக முடியலை என சிறு பிள்ளை தனமாக கூறுகிறார்.யாராவது சொந்த வீட்டில் திருடுவார்களா?இது பற்றி வழக்கு உள்ளது.இது அவருடைய தரம் தாழ்ந்த நிலையை காட்டுகிறது.சிறுபிள்ளைதனமாக பேசுகிறார்.தலைமை மீது ஆசை இல்லை என்று சொல்லுவது நாடகம். அவருடைய திருவிளையாடல் இறுதி அத்தியாயத்தின் திருவிளையாடல். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமிக்கே சொந்தம். எவ்வளவோ சோதனைகளை எல்லாம் கடந்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. சுயநலம் கொண்ட நபர்களிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றியவர் எடப்பாடி தான். கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் 99%  எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறார்கள்.

தொண்டர்கள் என்னிடம் உள்ளனர் என்று எதுவுமே புரியாத நபரை போல வாய்ப்பாடு பாடிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். பொதுக்குழுவுக்கு போக முடியாதது காரணம் போக்குவரத்து நெரிசல் என குழந்தை தனமான பதிலை சொல்கிறார். எனவே அவர் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை இழந்து விட்டார். அதிமுக யாருடைய அப்பா வீட்டு சொத்து என கேட்கிறார் ஓ.பி.எஸ்.
அவர் ஏன் அவருடைய சொந்த வீட்டில்  திருடினார்? " எனக் கேள்வி எழுப்பினார்.