’’ரவீந்தர் இது தமிழ்நாடு... உங்க வேலைய இங்க காட்டாதீங்க..’’

 
அ

அஜித் படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்று ஆளுநர் ஆர்.என். ரவியை குறி வைத்து பேசுவதாக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு  வருகிறது.

 தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர். என். ரவி பேசியது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.  இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை வாசித்தபோது உரையிலிருந்த, ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை தவிர்த்து பேசி இருக்கிறார் ஆளுநர்.  

ச்

இதற்கு முதல்வர் ஸ்டாலின் அப்போது கண்டனம் தெரிவித்ததால் மேலும் ஆளுநர் தரப்பில் இருந்து ‘தமிழ்நாடு’ என்று சொல்வதை தவிர்த்து அடுத்தடுத்த அதிரடி அம்புகள் பாய்கின்றன.   ஆளுநர் வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழில் ‘தமிழக ஆளுநர்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.  இதே முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாடு ஆளுநர் என்று அச்சிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .

இதனால் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.   கெட் அவுட் ரவி என்று டுவிட்டரில் ஹேஷ்டேக்  டிரெண்ட் செய்தும்,  போஸ்டர் அடித்து ஒட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அமைச்சர் உதயநிதியும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவின் சீனியர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநரை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுவதாக சொல்லபடும்,  அதே நேரம் போனி கபூர் பெயரில் படத்தையே தயாரித்ததாகவும் சொல்லப்படும் துணிவு திரைப்படத்தில்  ஆளுநரை தாக்கி பேசுவது மாதிரி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எச்சரிக்கை விடுவது மாதிரி டயலாக் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இதை ரசிகர்கள் வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ந்

துணிவு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,  மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரை பார்த்து பேசும்போது,  ’’ரவீந்தர் இது தமிழ்நாடு.. உங்க வேலையை இங்கே காட்டாதீங்க’’ என்று எச்சரிக்கிறார்.   இது ஆளுநர் ரவியை பார்த்து சொல்வதாகவே ரசிகர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசனம் இப்ப நடக்கும் அரசியலுக்கு ஒத்துப் போகுது.. உண்மைய சொல்லுங்க அமைச்சரே ரவீந்தர்- தமிழ்நாடு உங்க செய்கை தானே என்று உதயநிதி ஸ்டாலினை பார்த்து கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.