எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ் குமார்.. நாடு சந்தர்ப்பவாத கூட்டணிகளை தாண்டி முன்னேறியுள்ளது-. பா.ஜ.க. பதிலடி

 
ரவி சங்கர் பிரசாத்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நிதிஷ் குமார் செய்து வருவதை, 2014க்கு பிறகு நாடு இது போன்ற சந்தர்ப்பவாத கூட்டணிகளை தாண்டி முன்னேறியுள்ளது என்று பா.ஜ.க.வின் ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். கடந்த 5ம் தேதி டெல்லி வந்தது முதல் நிதிஷ் குமார் பல பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். நிதிஷ் குமாரின் இந்த முயற்சியை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான மற்றும் தீர்க்கமான தலைமைக்கு பின்னால் நாடு இப்போது வலுவாக உள்ளது. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

பீகார் வறட்சியால் தத்தளித்துக் கொண்டிருக்கும், கொலை போன்ற கடுமையான குற்றங்களின் பரவலான சம்பவங்களின் புகார்கள் வரும்  வேளையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில் பொதுவாக ஒரு சுத்தமான இமேஜை அனுபவித்த நிதிஷ் குமார் இப்போது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கயவர்களுடன் நிற்கிறார். அவர் இந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். ஆனால் 2014க்கு பிறகு நாடு இது போன்ற சந்தர்ப்பவாத கூட்டணிகளை தாண்டி முன்னேறியுள்ளது 

மோடி

மேலும் அந்த கட்சிகள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் நம்பாது. பிரதமர் மோடி தலைமையின்கீழ் நாடு 2014 முதல் ஸ்திரத்தன்மையையும், தீர்க்கமான தலைமையையும் அனுபவித்து வருகிறது. இது வளர்ச்சியில் நம்பிக்கையும் புதிய ஆற்றலையும் சமூகத்தில் புகுத்தியுள்ளது. மம்தா பானர்ஜி, கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் தாங்கள்தான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற கோரிக்கையை  கைவிடுவார்களா? நிதிஷ் குமார் இந்த பட்டியலில் கடைசியாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.