காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் பாக்கெட் அமைப்பாக மாறி விட்டது.. ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

 
ரவி சங்கர் பிரசாத்

காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் பாக்கெட் அமைப்பாக மாறி விட்டது என்று பா.ஜ.க.வின் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால  தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.  இந்த போராட்டத்தை காங்கிரஸ் சத்தியாகிரகம் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதனை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி சங்கர் பிரசாத் இது தொடர்பாக கூறியதாவது: இது சத்தியாகிரகம் அல்ல, நாட்டுக்கும், அதன் சட்டங்களுக்கும், அதன் நிறுவனங்களுக்கும் எதிரான துராக்ரா. 

காங்கிரஸ்

இதுவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கட்சியின் சொத்துக்களை பாக்கெட்டில் வைத்திருக்கும் குடும்பத்தை பாதுகாப்பதற்கான ஒரு துராக்ரா. நேஷனல்  ஹரால்டு நாளிதழை வெளியிடும் அசோசியேட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்புமிக்க சொத்துக்களை அபகரித்ததாக சோனிய காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரை ரத்து செய்வதற்கான அவர்களின் மனு உச்ச நீதிமன்றம் உள்பட ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் இருவரும் ஜாமீனில் உள்ளனர். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு

காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் பாக்கெட் அமைப்பாக மாறி விட்டது,  இப்போது அதன் சொத்துக்களும் குடும்பத்தால் பாக்கெட் செய்யப்படுகின்றன. நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிப்பதற்காக சோனியாவுக்கும், ராகுலுக்கும் 76 சதவீத பங்குகள் உள்ள யங் இந்தியன் நிறுவனத்தை காந்திகள் தொடங்கினார்கள். நாங்கள் சட்டத்தையும் நிறுவனங்களையும் மதிக்கிறோம். ஆனால் காங்கிரஸை பார்க்கிறோம். நாடாளுமன்றத்துக்கு வராத அதன் எம்.பி.க்கள் மற்றும் முதல்வர்கள் டெல்லியில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அமலாக்கத்துறையின் மனஉறுதியை குலைக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.