சங்கிகளின் கொ.ப.செ. -அது உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை ராசா - திமுக தாக்கு
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்கிறார் சங்கிகளின் கொ.ப.செ. ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், “தமிழ்நாடு” என்பது தமிழர்களின் பெருமைமிகு தனித்த அடையாளம் . எங்கள் பேறிஞர் அண்ணாவின் உரிமை முழக்கம்! எங்கள் உரிமை, உணர்வு முழுமுதற் சங்கியாகிய தங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை ராசா என்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.
காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்தது . இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வலர்களை பாராட்டினார் ஆளுநர் ஆர்என் ரவி. அப்போது பேசியவர், தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் . ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன . பாரதத்தின் பகுதி தமிழகம். பாரதத்தின் அடையாளம் தமிழகம் . உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என்று பேசியிருந்தார்.
தமிழ்நாடு என்கிற சொல்லை தவிர்த்து தமிழகம் என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. இதை அடுத்து தமிழ்நாடு என்கிற சொல் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
திமுக எம்பி டி ஆர் பாலு ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் , திமுகவின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு என்பது எங்கள் உரிமை, உணர்வு.. முழுமுதற் சங்கியாகிய தங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை ராசா என்கிறார்.