முதல்வர் வீட்டில்தான் பாலியல் பலாத்காரம் நடந்ததா? சிபிஐ ஆய்வில் சிக்கிய ஆவணங்கள்

 
sa

பாலியல் புகாரில் முதல்வர் வீட்டில் சிபிஐ நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.  இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த சோலார் பேனல் முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளாக சரிதா நாயரும்,  அவரது காதலர் பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.   இந்த ஊழலில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன.

sa

 வழக்கு விசாரணைக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உட்பட 6 பேர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்கள் என்று சரிதா நாயர் புகார் அளித்திருந்தது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. 

 உம்மன் சாண்டி முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தில் வைத்து தான் தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதாநாயர் புகார் கூறியிருந்தார்.  அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது.   இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. 

oo

 பலாத்காரம் செய்ததாக சரிதாநாயர் புகார் கூடியிருந்த நாளில் உம்மன்சாண்டி வீட்டில் இல்லை என சொல்லி வழக்கை போலீசார் முடித்து வைத்தனர்.  ஆனால் அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் இடம் சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார் . இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதனால்,  உம்மன்சாண்டி முதலமைச்சராக இருந்தபோது தங்கியிருந்த அரசு வீட்டில்தன் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் வசித்து வருகிறார்.   சரிதா நாயர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர் .  அப்போது சரிதா நாயரும் உடன் இருந்திருக்கிறார்.

pi

 இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகவும்,  இதன் அடிப்படையில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கின்றன .

முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி இருந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.