ராகுல் காந்தி மத்திய அமைச்சர் அல்ல, அதனால் லண்டன் பயணத்துக்கு அரசியல் அனுமதி தேவையில்லை.. காங்கிரஸ்

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி மத்திய அமைச்சரோ அல்லது அரசு பணியாளரோ இல்லை அதனால் அவரது லண்டன் பயணத்துக்கு அரசியல் அனுமதி தேவையில்லை என காங்கிரஸ் விளக்கம் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வியாழக்கிழமையன்று (மே 19) கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். ராகுல் காந்தி தனது லண்டன் பயணத்துக்கு வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறவில்லை என புதிய சர்ச்சையை கிளம்பியது. இந்நிலையில், ராகுல் காந்தி மத்திய அமைச்சர் இல்லை என்பதால் அவர் அரசியல் அனுமதி பெற தேவையில்லை என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. வேண்டுமென்றே அறியாமையில் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பயணம் செய்தால் அவருக்கு எப்.சி.ஆர்.ஏ. அனுமதி மட்டுமே தேவை. ராகுல் காந்திக்கு அதுதான் கிடைத்தது. ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கு அரசியல் அனுமதி தேவையில்லை. நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது மத்திய அமைச்சராக இருந்தால், உங்களுக்கு அரசியல் அனுமதி தேவை. 

மனோஜ் ஷா

நான் மீண்டும் சொல்கிறேன், ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. அல்லது எம்.எல்.சி. வெளிநாட்டு பயணங்களுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அரசு ஊழியர் அல்ல, அவர்கள் மக்கள் சேவகர்கள். எனவே, அரசு அல்லாத பயணங்களுக்கு அவர்கள் அரசாங்கத்திற்கு அவர்கள் பதிலளிக்க அவசியம் இல்லாதவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி.யும், புரோபசருமான மனோஜ் ஜா தனது லண்டன் பயணத்துக்கு அரசியல் அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளியுறவு அமைச்சகம்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாடு செல்வதற்கு முன் மத்திய அமைச்சகத்திடம் அரசியல் அனுமதி பெற வேண்டும். பயணத்துக்கு குறைந்தது 3 வாரங்களுக்கு முன்னதாகவே இணையதளத்தில் தகவல்களை வைத்து வெளியுறவு அமைச்கத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். கூடுதலாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து அழைப்புகளை பெற வேண்டும். நேரடி அழைப்பிதழ் இருந்தால், வெளிவிவகார அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசியல் அனுமதி பெற வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கு இந்த விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.