நேஷனல் ஹெரால்டு வழக்கு.. அன்று ஆங்கிலேயர்கள் செய்ததை இன்று மோடி அரசு செய்கிறது.. ரன்தீப் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு

சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை குறிப்பிட்டு, அன்று நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஆங்கிலேயர்கள் அடக்க முயன்றனர், இன்று மோடி அரசு அதை செய்கிறது என ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்த  வழக்கு தொடர்பான விசாரணைக்காக  இன்று ( ஜூன் 2 )  ராகுல் காந்தி ஆஜராகும் படியும், வருகிற ஜூன் 8 ம் தேதி சோனியா காந்தி ஆஜராகுமாறும்  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.   அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் பா.ஜ.க.வை ரன்தீப் சுர்ஜேவாலா கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸின் தலைமை செய்தி தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 1942ல் தொடங்கியது. அப்போது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர். இன்று மோடி அரசும் அதையே செய்கிறது. இதற்கு அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது.  நமது தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

ஜே.பி.நட்டா

சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், ஒரு குற்றவாளி நான் குற்றவாளி என்று சொல்வதை நீங்கள் எப்போதாவது பார்ததிருக்கிறீர்களா?. அவர்கள் (சோனியா-ராகுல்) மறுப்பாாகள். ஆவணங்கள் ஆதாரம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அதை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகுவீர்கள், ஆனால் அவர்கள் ஜாமீன் கோரினர். அப்படியென்றால் அவர்கள் குற்றவாளிகள் என்று அர்த்தம் என தெரிவித்தார்.