கடினமான நேரத்திலும் முகத்தை திருப்பிக் கொள்வதும், மௌனம் காப்பதும் மோடி அரசின் வாடிக்கை.. காங்கிரஸ்

 
ரஷ்யா-உக்ரைன் போர்

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யவில்லை என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் நிலவியது, போர் ஏற்படும் அபாயம் நிலவியது. இதனையடுத்து ஏர் இந்தியா உள்ளிட்ட சில விமான சேவை நிறுவனங்கள், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமான சேவையை இயக்கின. இந்த விமானங்களில் பல நூறு இந்தியர்கள் தாயகம் திரும்பினர். நேற்று காலையில் உக்ரைன் இன்டர்நேஷன் ஏர்லைன்ஸ் 182 இந்தியர்களுடன் டெல்லிக்கு வந்தடைந்தது.

4 மாதத்தில் 14 கோடி வேலைகள் இழப்பு.. மோடி இருந்தால் அது சாத்தியம்.. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கிண்டல்

இந்த சூழ்நிலையில் நேற்று ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் விமான தளங்களில் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதனால் அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்டெடுக்க சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யவில்லை என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

மோடி

இது தொடர்பாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், ஒவ்வொரு கடினமான நேரத்திலும் முகத்தை திருப்பிக் கொள்வதும், மௌனம் காப்பதும் மோடி அரசின் வாடிக்கையாகி விட்டது. உக்ரைனில் உள்ள நமது 20 ஆயிரம் இளைஞர்கள் பயம், அச்சம் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களை பத்திரமாக சரியான நேரத்தில் அழைத்து வர ஏன் ஏற்பாடு செய்யவில்லை? இதுதான் சுய சார்பு பணியா? என்று பதிவு செய்துள்ளார்.