மோடி அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு காலையிலும் உற்சாகத்தை விட சோகத்தை கொண்டு வருகிறது.. சுர்ஜேவாலா

 
மோடி

எரிபொருள் விலை உயர்வை குறிப்பிட்டு, மோடி அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு காலையிலும் உற்சாகத்தை விட சோகத்தை கொண்டு வருகிறது என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக நேற்று வரையிலான கடந்த 2 வாரங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 12 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.8.40 உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒப்பீடு

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை வயநாடு எம்.பி.யும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமர் மக்கள் நிதி கொள்ளை திட்டம் என்று பதிவிட்டு, 2014ம் ஆண்டுக்கும் தற்போதும் ஒரு வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப செலவாகும் தொகை தொடர்பான ஒப்பீட்டை காட்டும் படத்தை பதிவேற்றம் செய்து இருந்தார். 2014ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும், அப்போது ஒரு வாகனத்தின் எரிபொருள் டேங்க் முழுமையாக நிரப்புவதற்கான செலவினம் இப்போதே காட்டிலும்  குறைவாக இருந்ததை அது காட்டுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சி.என்.ஜி. உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், மோடி அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு காலையிலும் உற்சாகத்தை விட சோகத்தை கொண்டு வருகிறது என தெரிவித்தார்.