ராமதாஸ்,மோடி செஞ்சது சரியா? ஓபிஎஸ் செஞ்சதுதான் தவறா? பொன்னையன் திணறல்

 
ர

சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி பெருமையாக ஓபிஎஸ் பெருமையாக பேசியதும்,  அவரது மகன் ஸ்டாலினை சந்தித்து விட்டு திமுகவின் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று சொன்னதும் தான் ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து ஓரங்கட்ட காரணம் என்று எடப்பாடி தரப்பினர் அழுத்தமாக சொல்லி வரும் நிலையில்,  அது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் விளக்கம் அளித்திருக்கிறார்.

மொ

ஓபிஎஸ்சை உதாசீனப்படுத்தி ஓரங்கட்டுவது சரியா? துரோகம் இல்லையா? என்ற கேள்விக்கு,  ’’அவரை நாங்கள் உதாசீனப்படுத்தவும் இல்லை. ஓரங்கட்டவும் இல்லை.  பொதுக்குழுவுக்கு வாருங்கள் என்று சொன்னோம்.  ரெண்டாயிரத்து சொச்சம் பேர் இபிஎஸ்க்கு ஆதரவளிக்கும் நிலையில்  2 சதவிகிதம் பேர் கூட நமக்கு ஆதரவு இல்லையே என்று அவர்தான் வெட்கப்பட்டுக்கொண்டு பொதுக்குழுவுக்கு வரவில்லை.  வெட்கப்பட்டுக்கொண்டு பதவி கேட்கவில்லை’’ என்கிறார்.

தாயை பற்றி இழிவாக பேசினார்கள். பாட்டிலை தூக்கி வீசினார்களே? என்ற கேள்விக்கு,  ’’கருணாநிதியை உங்க அப்பா கடவுளாக நினைத்தார் என்றால் அதிமுகவில் உனக்கு என்ன வேலை? கருணாநிதியை தீய சக்தி என்று சொன்னார் ஜெயலலிதா. அந்த தீய சக்தியின் மகன்  ஆட்சி ஊழல் என்று எடப்பாடி  போராட்டம் செய்கிறார்.  ஆனால்  திமுகவின் ஓராண்டு ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் ஓபிஎஸ் மகன். அதனால்தான் பொதுக்குழுவில் அவரை திட்டினார்கள்’’ என்று சொல்ல,

ட்ம்

இதைவிட கேவலமாக கீழ்த்தரமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை  மம்மி என்றும் மோடியை டாடி என்றும் சொன்னாரே? அசிங்கமாக வெளிப்படையாக சொன்னாரே என்று கேட்க,   ’’அதுல என்ன தப்பு இருக்குது?’’என்று கேட்க,    ’’அம்மா டாடின்னா தப்பில்லையா?’’என்ற கேள்விக்கு,   ’’அவர் எப்போதும் மோடியை டாடின்னுதான் சொல்லுவார்’’என்று சமாளிக்கிறார் பொன்னையன்.  

பொ

கருணாநிதியை ஓபிஎஸ் பாராட்டியதால் தீய சக்தியை பாராட்டியதால் அவர் மீது அதிருப்தி என்று சொல்கிறீர்கள். ஓரங்கட்டுகிறீர்கள். ஆனால்,  ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஜெயலலிதாவின் போட்டோவை தலைமைச்செயலகத்தில் மாட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் என்று ராமதாஸ் சொன்னார்.  தேமுதிகவும் சொன்னது.  இந்த காரணத்திற்காகத்தான் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவிற்கு மோடி வரவில்லை.  இவர்கள் எல்லோருமே ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று பார்த்தார்கள்.   ஆனால் அவர்கள் மேல் தோள் மேல் கை போட்டுக்கொண்டு நீங்கள் சவாரி செய்கிறீர்கள்.  அவர்களோடு தோழமையாக இருக்கிறீர்கள்.  ஓபிஎஸ்சிடம் மட்டும் ஏன் பாரபட்சம் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு,    ’’மோடி வராமல் இருந்தது ஏன் என்று அவரிடம் கேளுங்கள்.  ராமதாஸ் சொல்லட்டும் அது  அவருடைய கருத்து’’என்று பொன்னையன் தடுமாற,  அவர்கள் ஏன் தீய சக்தியாக தெரியவில்லை? என்று கேட்க,  ’’எங்களுடைய கொள்கை வேறு ராமதாஸ் அய்யாவின் கொள்கை வேறு..’’ என்று தடுமாறுகிறார் பொன்னையன்.