ராமர் கடவுள் இல்லை; ஒரு கதையின் கதாபாத்திரம் மட்டுமே - பீஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி பேச்சால் சர்ச்சை

ராமர் கடவுள் இல்லை; ஒரு கதையின் கதாபாத்திரம் மட்டுமே  - பீஹார் முன்னாள் முதல்வர்  ஜிதன் ராம் மாஞ்சி பேச்சால் சர்ச்சை

 நான் ராமரை நம்பவில்லை என்றும் , அவர் கடவுள் இல்லை ஒரு கதையின் கதாப்பாத்திரம் தான் என பீஹார் முன்னாள்  முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நேற்று ( ஏப் 14 - வியாழக்கிழமை) பீஹார் மாநிலத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் , பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும்  ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (HAM) கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி சர்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.  

ராமர் கடவுள் இல்லை; ஒரு கதையின் கதாபாத்திரம் மட்டுமே  - பீஹார் முன்னாள் முதல்வர்  ஜிதன் ராம் மாஞ்சி பேச்சால் சர்ச்சை

  அவர், "நான் ராமரை நம்பவில்லை என்றும்,  அவர் கடவுள் இல்லை துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே ராமர் என்றும்  தெரிவித்துள்ளார். அத்துடன்  அவர்கள் ராமாயணத்தை எழுதினார்கள் என்றும், அதில் பல நல்ல பாடங்கள் உள்ளதாகவும் மாஞ்சி கூறினார்.  நாங்கள் துளசிதாசர் மற்றும் வால்மீகியை நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.

ராமர் கடவுள் இல்லை; ஒரு கதையின் கதாபாத்திரம் மட்டுமே  - பீஹார் முன்னாள் முதல்வர்  ஜிதன் ராம் மாஞ்சி பேச்சால் சர்ச்சை

மேலும்  சபரி கடித்துக் கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்டதாக நாங்கள் கதைகளில் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறிய அவர்,  நீங்கள் ராமரை நம்பினால் நாங்கள் கடித்துக் கொடுத்தப் பழத்தை  சாப்பிட வேண்டாம் மாறாக எங்கள் கைப்பட்ட பழத்தையாவது சாப்பிடுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.  தொடர்ந்து பேசிய அவர்,  இந்தியாவில் நிலவி வரும் சாதிய பாகுபாட்டை சுட்டிக்காட்னார். அத்துடன் இங்கு, ஏழை - பணக்காரன் என இரண்டு சாதிகள் மட்டுமே  இருப்பதாக குறிப்பிட்டார். பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரான ஜிதன் ராம் மாஞ்சி, இந்த கருத்து  கூட்டணிக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.